பிரேசில் ஜனாதிபதிக்கு எதிராக 160 நகரங்களில் போராட்டங்கள்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
03

பிரேசில் ஜனாதிபதிக்கு எதிராக 160 நகரங்களில் போராட்டங்கள்

பிரேசில் ஜனாதிபதிக்கு எதிராக 160 நகரங்களில் போராட்டங்கள்

பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சோனியை பதவி நீக்கம் செய்யக்கோரி பிரேசில் முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன.

 

வெளிநாட்டு அறிக்கைகளின்படி, ரியோ டி ஜெனிரோ மற்றும் சாவ் பாலோ உட்பட 160 நகரங்களில் போராட்டங்கள் நடைபெறுகின்றன.

 

பிரேசில் ஜனாதிபதியால் கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்த முடியவில்லை என்று குற்றம் சாட்டி அவரை பதவி விலகுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்துகின்றனர்.

 

 அவர் 2022 பிரேசில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

பிரேசில் தற்போது உலகின் இரண்டாவது அதிக தொற்றுள்ள நாடாக பதிவாகியுள்ளதுடன் அதன் மொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 1,459,117 ஆகும்.

 

உலகிலேயே இறப்பு விகிதத்தில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளதுடன் அங்கு 597,749 மரணங்கள் பதிவாகியுள்ளன.

views

248 Views

Comments

arrow-up