இன்று கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம்

நாடாளுமன்றக் கூட்டம் குறித்து முடிவெடுப்பதற்காக கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (07) காலை நடைபெற உள்ளது.
நாளை (08) நாடாளுமன்றம் கூட்டப்படுமா இல்லையா என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் கட்சித் தலைவர்களின் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும்.
தற்போது குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனும் கலந்து கொள்வார் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
source:adaderana
617 Views
Comments