தீப்பற்றிய MV XPRESS PEARL கப்பல் இன்னும் சில மணித்தியாலங்களில் கடலில் மூழ்கும் அபாயம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAY
27

தீப்பற்றிய MV XPRESS PEARL கப்பல் இன்னும் சில மணித்தியாலங்களில் கடலில் மூழ்கும் அபாயம்

தீப்பற்றிய MV XPRESS PEARL கப்பல் இன்னும் சில மணித்தியாலங்களில் கடலில் மூழ்கும் அபாயம்

வத்தளையில் இருந்து மாறவில  வரையான கடற்கரை பகுதிகளின் நீர் மாதிரிகள் சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தீப்பற்றிய MV XPRESS PEARL கப்பலிலிருந்து வீழ்ந்த கொள்கலன்களால் சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்டறிவதற்கு நீர் மாதிரிகள் சேகரிக்கபடுவதாக நாரா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது வரையான அறிக்கைகளின் பிரகாரம் இதுவரை இரசாயன பதார்த்தங்களால் பாதிப்புகள் ஏற்படவில்லை என நாரா நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பாலித்த கித்சிரி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலையால் மீனவர்களின் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக கடற்றொழிலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை திக்கோவிட்டவிலிருந்து சிலாபம் வரையான கரையோரப் பகுதியில் கடற்படையினர் விசேட தேடுதல் முன்னெடுத்துள்ளனர். வெள்ளவத்தை மற்றும் பாணந்துறை கரையோரப் பகுதிகளிலும் கடற்படையினர் இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் கடற்படையினர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களம் ஒன்றிணைந்து இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். கொழும்பு துறைமுகத்திற்கு வடமேற்கு திசையில் பரவியுள்ள MV XPRESS PEARL கப்பலில் இருந்து கடலுக்குள் கலந்துள்ள பொருட்கள் கரை  ஒதுக்குவதால்  அவற்றை தொட வேண்டாம் என கடற்படையினர் அறிவித்துள்ளனர். இதேவேளை கப்பல் தீப் பற்றுவதால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தவிர்ப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கப்பலில் உள்ள பொருட்களை கொண்டு வருவதும் சேகரிப்பதும் ஏனைய காரணங்களுக்காக பயன்படுத்துவதும் அவற்றை  தொடுவது அபாயகரமான விடயம் என அதிகார சபை அறிக்கை ஊடாக குறிப்பிட்டுள்ளது. இதனால் தீ பரவியுள்ள கப்பலிலிருந்து கரையொதுங்கும் பொருட்களைத் தொட வேண்டாம் என பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கரையோரப் பகுதிகளில் ஏதேனும் பொருட்கள் கரை ஒதுங்கும் ஆயின் 1981 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எக்ஸ்பிரஸ் கப்பல் எதிர்வரும் சில மணித்தியாலங்களில் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக கடல் மாசுறல் தடுப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது கப்பலில் தொடர்ந்து  தீ பரவி செல்வதால் கப்பல் கடலில் மூழ்குவதுடன் எண்ணெய் கடலில் கலப்பதற்கான சாத்தியம் உள்ளதாக சபையின் பொது முகாமையாளர் பேராசிரியர்  டெனி பிரதீப் குமார கூறியுள்ளார் அதற்கான முன்னேற்பாடுகளில் செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார் இதற்குத் தேவையான உபகரணங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது உடன் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு இது குறித்து தெளிவுட்டப்பட்டுள்ளது.

 

 

 

 

 

source:newsfirst

views

284 Views

Comments

arrow-up