படகு கவிழ்ந்ததில் தந்தையும் மகளும் காணாமல் போயினர்...

நீர்கொழும்பு முன்னக்கரை களப்பில் சவாரியில் ஈடுபட்டிருந்த படகு கவிழ்ந்ததில் இருவர் காணாமல் போயுள்ளனர்.
முன்னக்கரை களப்பை பார்வையிடுவதற்காக 7 பேர் கொண்ட குழு இன்று(24) காலை வந்துள்ளது.
அவர்கள் படகில் பயணித்துக்கொண்டிருந்த போது முன்னக்கரை மோட பாலத்திற்கு அருகில் படகு கவிழ்ந்ததாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
பிரதேச மக்களால் ஐவர் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனினும் இதுவரையில் 02 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை.
50 வயதுடைய தந்தையும் அவரது 19 வயதுடைய மகளுமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்களைக் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
110 Views
Comments