யாழ்/உடுவில் மகளிர் கல்லூரியின் 200ஆவது ஆண்டு விழா

யாழ்/உடுவில் மகளிர் கல்லூரி தனது 200ஆவது ஆண்டு நிறைவை பாடல்கள் நிறைந்த ஆராதனையுடன் கொண்டாடியது.
இந்த நிகழ்வு கொழும்பில் உள்ள வாழும் கிறிஸ்துவின் தேவாலயத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரி 200 வருடங்களுக்கு முன்னர் 1824 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
பெண் பிள்ளைகளின் கல்வியை ஊக்குவிக்க வேண்டும் என்பதே உடுவில் மகளிர் கல்லூரியின் ஸ்தாபகர்களின் முதன்மை நோக்கமாகும்.
200 வருட வரலாற்றில் தற்போதைய அதிபர் ரொசானா குலேந்திரன் உட்பட 10 அதிபர்கள் மாத்திரம் இப்பாடசாலைக்கு சேவையாற்றியுள்ளமை விசேட அம்சமாகும்.
அவர்களில் பெரும்பாலானோர் தமது சேவைக் காலத்தில் நீங்கா அடையாளத்தை பாடசாலையில் பதித்துள்ளதுடன் அது பாடசாலையின் பாரம்பரிய வலிமையைக் கட்டியெழுப்புவதற்கும் வழிவகுத்துள்ளது.
108 Views
Comments