கொழும்பு - தலைமன்னார் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
13

கொழும்பு - தலைமன்னார் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

கொழும்பு - தலைமன்னார் ரயில் சேவைகள் மீள ஆரம்பம்

கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில் சேவை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

 

மாகோ மற்றும் அனுராதபுரம் இடையிலான ரயில் மார்க்கம் நவீனமயப்படுத்தப்பட்டு புனரமைக்கப்பட்ட நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

 

புனரமைப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த தலைமன்னார் ரயில் சேவை சுமார் 11 மாதங்களின் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே போக்குவரத்து பிரதி பொதுமுகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.



இதற்கமைய கொழும்பு கோட்டையிலிருந்து இன்று(12) முதல் நாளாந்தம் பிற்பகல் 04.15 க்கு குறித்த ரயில் சேவை ஆரம்பமாகி இரவு 10.15 க்கு தலைமன்னாரை சென்றடையவுள்ளது.

 

தலைமன்னாரில் இருந்து நாளை(13) அதிகாலை 04.15 க்கு கொழும்பு கோட்டை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்கும் ரயில், காலை 10.15 க்கு கொழும்பு கோட்டையை வந்தடையுமென ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

views

101 Views

Comments

arrow-up