காலிமுகத் திடலை விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம்

காலிமுகத் திடல் மைதானத்தை பல்வேறு சமூக செயற்பாடுகளுக்காக மீள வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காலிமுகத் திடல் மைதானத்தை சமூக செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்காதிருக்க கடந்த வருடம் ஏப்ரல் 17ஆம் திகதியன்று அப்போதைய அமைச்சரவையால் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
காலிமுகத் திடல் மைதானத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்பு நடவடிக்கைகளுக்காக மாதாந்தம் சுமார் 2.5 - 3 மில்லியன் ரூபா வரை செலவாகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொகையை ஈடு செய்வதற்காக புதிய தீர்மானத்தை எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
120 Views
Comments