பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று(30) ஆரம்பம்

பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று(30) காலை 8.30 க்கு ஆரம்பமாகின.
738,000க்கு அதிகமான அரச உத்தியோகத்தர்கள் தபால் மூல வாக்களிப்பிற்கு தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
தபால் மூல வாக்களிப்பிற்கு செல்லுபடியாகும் அடையாள அட்டை கட்டாயம் என அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தபால் மூல வாக்களிப்பு இடம்பெறும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
தபால் மூல வாக்களிப்பை கண்காணிப்பதற்காக 1000 கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த பெஃவ்ரல்அமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
137 Views
Comments