மத்திய மாகாண தமிழ் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை

மத்திய மாகாண பாடசாலைகளில் தரம் 8 மற்றும் தரம் 9 இற்கான தமிழ் வினாத்தாள் தொடர்பான பிரச்சினை குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பில் ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் நிஹால் அழககோன் தெரிவித்தார்.
கடந்த 21ஆம் திகதி மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தால் சிங்கள மொழி மூல மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தமிழ் வினாத்தாளில் பிரச்சினை ஏற்பட்டது.
தரம் 9 மற்றும் தரம் 8-இற்கு ஒரேமாதிரியான வினாக்கள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டதே இதற்கான காரணமாகும்.
அதன்படி தரம் 9 மாணவர்களுக்கு எதிர்வரும் 25ஆம் திகதி மீண்டும் தமிழ் வினாத்தாள் வழங்கப்பட்டு இரண்டாம் கட்டமாக பரீட்சை நடத்தப்படவுள்ளதாக மத்திய மாகாண கல்விப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
122 Views
Comments