10 ஈரானிய பிரஜைகளுக்கு ஆயுள்தண்டனை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
OCT
23

10 ஈரானிய பிரஜைகளுக்கு ஆயுள்தண்டனை

10 ஈரானிய பிரஜைகளுக்கு ஆயுள்தண்டனை

ஈரானிய பிரஜைகள் 10 பேருக்கு நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(23) ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

மேல் நீதிமன்ற நீதிபதி பமில ரத்நாயக்கவால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

2016ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காலியை அண்மித்த கடற்பரப்பில் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 17 பேரில் 10 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளமையால் இவ்வாறு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய 7 பேர் மீதும் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

காலியை அண்மித்த கடற்பரப்பில் விபத்திற்குள்ளான படகை சோதனைக்குட்படுத்திய போது போதைப்பொருள் என சந்தேகிக்கப்பட்ட 146 கிலோகிராம் பொருட்கள் அடங்கிய பொதியுடன் சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

 

பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் குறித்த பொதியில் 48 கிலோகிராம் ஹெரோயின் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

views

115 Views

Comments

arrow-up