லொஹான் ரத்வத்தேயின் பிணை மனுவை பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
12

லொஹான் ரத்வத்தேயின் பிணை மனுவை பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம்

லொஹான் ரத்வத்தேயின் பிணை மனுவை பரிசீலனைக்கு எடுக்க தீர்மானம்

மிரிஹானயில் வீடொன்றில் இருந்து பதிவு செய்யப்படாத வாகனம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தேயை பிணையில் விடுவிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம்  தீர்மானித்துள்ளது.

 

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் பீ ஷஷீ மஹேந்திரன் ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

 

இந்த மனு தொடர்பில் விடயங்களை முன்வைக்குமாறு குறிப்பிட்டு பொலிஸ் மாஅதிபர் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை அனுப்புவதற்கு மனுதாரர் தரப்பினருக்கு நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளது.

views

137 Views

Comments

arrow-up