பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பிலான அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
05

பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பிலான அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு

பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி தொடர்பிலான அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு

பொதுத்தேர்தலை நடத்துவதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை  மனு  பரிசீலனைக்கு எடுத்துக்​கொள்ளப்படவுள்ளது.

 

உயர் நீதிமன்றத்தின் 5 பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

 

சிவில் அமைப்பு செயற்பாட்டாளர் ஒருவர், "நாம் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பின்" ஏற்பாட்டாளர் H.M. பிரியந்த ஹேரத் ஆகியோர் குறித்த மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

 

பொதுத் தேர்தலை நவம்பர் 14 ஆம் திகதி நடாத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அரசியலமைப்பிற்கு முரணானது என தீர்ப்பு வழங்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் கடந்த 21 ஆம் திகதி அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

தேர்தல் சட்டங்களின் விதிமுறைகளுக்கு முரணாகவே பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் வாக்கெடுப்பை நடாத்துவதற்கான தினம் ஆகியன அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

மனுவின் பிரதிவாதிகளாக ஜனாதிபதியின் சார்பில் சட்ட மாஅதிபர், ஜனாதிபதி செயலாளர், தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் , சட்ட மாஅதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

views

102 Views

Comments

arrow-up