மின் கட்டணம் தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபைக்கு அறிவித்தல்

மின் கட்டணத்தை குறைப்பது தொடர்பான புதிய யோசனையை எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் முன்வைக்கப்பட்ட யோசனையில் கட்டண திருத்த விலை சூத்திரத்துடன் இணங்குவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக குறித்த அறிவித்தல் மின்சார சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையினால் 6 வீத மின்சார கட்டண திருத்தம் முன்வைக்கப்பட்டதுடன் குறித்த கட்டணத்தை விட அதிக வீதத்தினால் கட்டணத்தை குறைக்க முடியும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
112 Views
Comments