சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி பெயரை பயன்படுத்தி பணம் சேகரித்தவர்கள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் சில தரப்பினரால் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் பெயரை பயன்படுத்தி பணம் சேகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுகாதார அமைச்சின் அதிகாரிகள் தொலைபேசி, வட்ஸ்அப் ஊடாக அல்லது எந்த ஊடகம் வழியாகவும் நிதி சேகரிப்பதில்லை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான மோசடிகாரர்களிடம் ஏமாந்து வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிடவோ அல்லது வேறு வழிகளில் பணத்தை அனுப்பவோ வேண்டாமெனவும் மோசடியாளர்களை சட்டத்தின் முன் நிறுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் சுகாதார அமைச்சு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
129 Views
Comments