இலங்கை வரலாற்றில் முதல்தடவையாக விழிப்புலனற்றோர் சார்பில் பாராளுமன்றம் செல்லும் சுகத் வசந்த டி சில்வா

எமது நாட்டின் மக்கள் தொகையில் 2 மில்லியன் பேர் விசேட தேவையுடையவர்களாக உள்ளனர்.
நாட்டின் மொத்த சனத்தொகையில் சுமார் 9 வீதமான இந்த பிரிவினர் சார்பில் வரலாற்றில் முதல்தடவையாக பாராளுமன்றத்திற்கு ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியலில் இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
சிறுவயதில் இடம்பெற்ற விபத்தினால் கண்பார்வையை இழந்த சுகத் வசந்த டி சில்வா கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரி ஆவார்.
25 வருடங்களாக சமூக சேவை உத்தியோகத்தராக பணியாற்றிய இவர், இலங்கை விழிப்புலனற்ற பட்டதாரிகள் பேரவையின் தலைவராகவும் உள்ளார்.
97 Views
Comments