பொகவந்தலாவையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 தொழிலாளர்கள்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
25

பொகவந்தலாவையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 தொழிலாளர்கள்

பொகவந்தலாவையில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 தொழிலாளர்கள்

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெரேசியா தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகிய 7 பேர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தேயிலை மலையில் பறித்துக்கொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் 7 பேர் நேற்று(23) மாலை குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குறித்த 7 பேரில் இருவர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதாகவும் ஏனைய ஐவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலையின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

views

135 Views

Comments

arrow-up