வாக்களிக்கும் உரிமை கோரி பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
12

வாக்களிக்கும் உரிமை கோரி பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வாக்களிக்கும் உரிமை கோரி பல்கலைக்கழக மாணவர்கள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஜனாதிபதித் தேர்தலில் பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்கு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் அற்றுப்போவதாக தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 

பெவ்ரல் அமைப்பினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். 

 

யாழ்ப்பாணம், ருஹூணு மற்றும் களனி பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் சிலருக்கே இவ்வாறு வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் அற்றுப்போகும் நிலை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

 

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாள் முழுவதும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுவதால் தூரப்பிரதேசங்களில் வசிக்கும் மாணவர்கள் இந்தப் பிரச்சினையை எதிர்நோக்குவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 

இது தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதற்கு பல்கலைக்கழக உபவேந்தர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக மனித உரிமைகள் ஆணையாளரான நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

views

145 Views

Comments

arrow-up