கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மிகப்பெரிய கப்பல்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
06

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மிகப்பெரிய கப்பல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த மிகப்பெரிய கப்பல்

மிகப்பெரிய கப்பலான "EVER ARM" கொழும்பு (Colombo) துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதாக  இலங்கை துறைமுக அதிகார சபை (Sri Lanka Ports Authority ) தெரிவித்துள்ளது.

 

குறித்த கப்பலானது, நேற்று (05) கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

400 மீற்றர் நீளம், 60 மீற்றர் அகலம் மற்றும் 17.027 மீற்றர் மூழ்கும் தன்மை (கோடை காலத்தில் சரக்குகளை முழுமையாக ஏற்றும் போது கப்பலின் மேலோட்டம் மூழ்கக்கூடிய அதிகபட்ச ஆழம் என்பவற்றை "EVER ARM"  கப்பல் கொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

 

அத்துடன், செயல்பாட்டு திறன் (கப்பலின் இயங்கும் திறன்) மற்றும் சரக்கு திறன் (கப்பல் எடுத்துச் செல்லக்கூடிய சரக்கின் அளவு) என்பவற்றை மேம்படுத்தும் மேம்பட்ட உந்துவிசை அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

குறிப்பாக, சுமார் 24,000 TEU ( 20 அடி கொள்கலன் ) சுமக்கக் கூடிய இக் கப்பலை ஆசியாவின் (Asia) ஒரு சில துறைமுகங்களால் மட்டுமே கையாள முடியும் என கூறப்படுகின்றது. அந்த வரிசையில் கொழும்பு துறைமுகமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையமானது, ஆழ்கடல் முனையமாக அபிவிருத்தி செய்யப்பட்டு அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன உள்கட்டமைப்புகளுடன் நிர்மானிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என தெரியவந்துள்ள.

 

இதன் பயனாக சீனா (China) -ஐரோப்பா (Europe) -மத்திய தரைக்கடல் (Mediterranean Sea ) சார்ந்த வர்த்தக பாதையில்  இலங்கையின் (Sri Lanka) முக்கியத்துவம் நிரூபிக்கப்படுவதால் புதிய சந்தைவாய்ப்பு, முதலீடுகள், தொழில்வாய்ப்பு போன்றவைகளை இலகுவாக பெற்றுக்கொள்ள முடியுமென இலங்கை துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளமை மேலும் குறிப்பிடத்தக்கது.

views

145 Views

Comments

arrow-up