ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸார்

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் கட்அவுட்களை நீக்குவதற்காக 1500 தொழிலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடளாவிய ரீதியில் இடம்பெறும் சட்டவிரோத தேர்தல் பிரசார செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.
இதனிடையே 54,000 பொலிஸாரை ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அசங்க கரவிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.
155 Views
Comments