ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன - தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை 836 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் தேர்தல் சட்ட விதி மீறல்கள் தொடர்பாக 812 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன.
வன்முறைச் செயல்கள் தொடர்பிலும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் 35 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தேர்தல் சட்டங்களை மீறியதாக 21 முறைப்பாடுகளும் வன்முறைகள் தொடர்பாக 14 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் அரச சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்திய சம்பவங்களும் அதிகரித்துள்ளதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக ஃபெவ்ரல் அமைப்புக்கு 228 முறைப்பாடுகளும் ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கற்கைகள் நிறுவகத்திற்கு 150 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
149 Views
Comments