13 ஆண்டுகளின் பின்பு யானைகள் கணக்கெடுப்பு

13 ஆண்டுகளின் பின்னர் நாடளாவிய ரீதியில் யானைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
இன்று(17), நாளை, நாளை மறுதினம் ஆகிய 3 நாட்களுக்கு யானைகள் தொடர்பான கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படுமென வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 3130 நிலையங்களில் யானைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
நாட்டில் வாழும் யானைகளின் முழுமையான எண்ணிக்கையை உறுதிசெய்துகொள்ளக்கூடிய வகையில் நாடளாவிய ரீதியில் தரவுகள் மற்றும் தகவல்களை புதுப்பிக்க 2011 ஆம் ஆண்டின் பின்னர் யானைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
இதனால் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆசியாவில் யானைகள் வாழும் குறிப்பிட்ட சில நாடுகளில் ஒன்றாகவுள்ள இலங்கையில் யானைகளின் பாதுகாப்பு தேசியக் கொள்கையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் சர்வதேச பாதுகாப்பு முயற்சிகளுக்கு அமைவாக அதனை நாட்டின் பொறுப்பாக உருவாக்கியுள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிடுகின்றது.
168 Views
Comments