ஏறாவூரில் ஒருவர் கொலை - சந்தேகநபர் கைது

ஏறாவூர் - மிச்சிநகரில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 6ஆம் திகதி மிச்சிநகரை சேர்ந்த 52 வயதான ஒருவர், கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்த சம்பவம் தொடர்னே விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர்.
அதனடிப்படையில், கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஏறாவூரை சேர்ந்த 26 வயதான இளைஞரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் ஏற்கனவே தேடப்பட்டு வந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
171 Views
Comments