ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனுர குமார திசாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திசாநாயக்க சார்பில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இராஜகிரியவிலுள்ள தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத், கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் சட்டத்தரணி சுனில் வட்டகல உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.
அதற்கமைய இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 18 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.
214 Views
Comments