கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கிக்கப்பல்

இந்திய கடற்படைக்கு சொந்தமான ‘INS Shalki’ நீர்மூழ்கிக்கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
இன்று(02) காலை வருகை தந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.
64.4 மீட்டர் நீளமுடைய INS Shalki கப்பலில் 40 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
INS Shalki கட்டளைத்தளபதி Commander Rahul Patnaik மற்றும் மேற்கு கடற்படை கட்டளைத்தளபதி சிந்தக குமாரசிங்க ஆகியோருக்கு இடையே உத்தியோகபூர்வ சந்திப்பொன்று இன்று(02) கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த கப்பல் எதிர்வரும் 4ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது.
184 Views
Comments