நாமலுக்கு எதிராக அமைச்சர் முறைப்பாடு: கைவிரித்த காவல்துறை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUL
29

நாமலுக்கு எதிராக அமைச்சர் முறைப்பாடு: கைவிரித்த காவல்துறை

நாமலுக்கு எதிராக அமைச்சர் முறைப்பாடு: கைவிரித்த காவல்துறை

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கு(Namal Rajapaksa)  எதிராக முறைப்பாடு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை காவல்துறையினர் நிராகரித்துள்ளனர்.

 

குறித்த முறைப்பாட்டை அமைச்சர் பந்துல குணவர்தன(Bandula Gunawardane) ஹோமாகம காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

 

அதாவது, நாமல் ராஜபக்ச தமக்கு அறிவித்தல் வழங்காமல் ஹோமாகமவில் பொதுஜன பெரமுன கூட்டத்தை ஏற்பாடு செய்தமை தொடர்பில் அமைச்சர் பந்துல குணவர்தன இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

 

எனவே, நாமல் ராஜபக்ச கட்சி ஒழுக்கத்தை மீறியுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனினும், இது போன்ற விடயங்களில் நடவடிக்கை எடுக்க முடியாது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

 

இது தொடர்பில் நாமல் ராஜபக்ச, தான் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஜானக வெலிவத்தவின் வீட்டிற்கு வந்ததாகவும், அதன்படி அங்கு தேநீர் வைபவத்தில் கலந்து கொண்டதாகவும் கட்சி உறுப்பினர்கள் பலர் தம்மை சந்திக்க வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

views

180 Views

Comments

arrow-up