எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தினார் சாகர
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
06

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தினார் சாகர

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: கட்டுப்பணம் செலுத்தினார் சாகர

எல்பிட்டிய (Elpitiya) பிரதேச சபைத் தேர்தலுக்காக, சிறிலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அதன் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் (Sagara Kariyawasam) உள்ளிட்ட தரப்பினர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

காலி மாவட்ட செயலகத்தில் இன்று (06) கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

 

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக கடந்த மாதம் 26ஆம் திகதி முதல் கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை ஆரம்பமானது. இதற்கான கால அவகாசம் எதிர்வரும் 11ஆம் திகதி வரை வழங்கப்பட்டுள்ளது.

 

அத்துடன், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

views

168 Views

Comments

arrow-up