நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் பிரபலம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
06

நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் பிரபலம்

நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் பிரபலம்

ஆசியாவில் நடைபெறவுள்ள மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான நியூசிலாந்தின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக  இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரங்கன ஹெரத் (Rangana Herath) நியமிக்கப்பட்டுள்ளார்.

 

நியூசிலாந்து (New Zealand) டெஸ்ட் கிரிக்கெட் அணி அடுத்த இரண்டு மாதங்களில் ஆசியாவில் 6 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

 

அத்தோடு, ஆப்கானிஸ்தான் அணியுடன் இந்தியாவில் நடைபெறவுள்ள போட்டிக்கும், இலங்கை அணியுடன் இலங்கையில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கும் ரங்கன ஹேரத்தின் சேவையை நியூசிலாந்து அணி பெற்றுள்ளது.

 

கடந்த காலங்களில் இலங்கை அணிக்காக 93 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹெரத், 433 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

 

இதேவேளை, பாகிஸ்தானின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரும் பயிற்சியாளருமான சக்லைன் முஷ்டாக்கிற்கு பதிலாக ஹெராத் நியமிக்கப்பட்டுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

views

155 Views

Comments

arrow-up