தேசபந்து மீதான இடைக்காலத் தடையை நீக்கக் கோரிய மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
06

தேசபந்து மீதான இடைக்காலத் தடையை நீக்கக் கோரிய மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு

தேசபந்து மீதான இடைக்காலத் தடையை நீக்கக் கோரிய மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) தாக்கல் செய்த இடைக்கால மனுவின் உண்மை நிலையை உறுதிப்படுத்துவதற்கான திகதியை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

 

அதன்படி, எதிர்வரும் 13ஆம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

 

காவல்துறை மா அதிபர் என்ற ரீதியில் தாம் கடமையாற்றுவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவை நீக்குமாறு கோரி தேசபந்து தென்னகோன் குறித்த மனுவை தாக்கல் செய்தார்.

 

இந்த இடைக்கால மனு இன்று (06) யசந்த கோதாகொட, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

 

குறித்த மனுவை வரும் 13ஆம் திகதி விசாரணைக்கு அழைத்து, உண்மை நிலையை சரிபார்க்கும்படி மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டுள்ளது.

 

இதேவேளை, கடந்த ஜூலை 24 அன்று, தேசபந்து தென்னகோன் காவல்துறை மா அதிபராக  செயற்படுவதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

views

148 Views

Comments

arrow-up