இன்னும் 3 நாட்களில் மற்றுமொரு டீசல் கப்பல் இலங்கைக்கு...

அடுத்த மூன்று நாட்களுக்குள் மற்றுமொரு டீசல் கப்பல் இலங்கைக்கு வரவுள்ளதாக பெற்றோலியத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது பெற்றோல் கப்பலுக்கான ஆர்டரை வழங்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளதாக பெட்ரோலிய அமைச்சு மீண்டும் உறுதி செய்துள்ளது.
இதேவேளை, போக்குவரத்துக்காக பெறப்பட்ட எரிபொருள் ஆர்டர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய தனியார் பவுசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து வருவதாக அதன் இணைச் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள போதிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகள் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
579 Views
Comments