சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்தித்த உதய கம்மன்பில

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை உதய கம்மன்பில சந்தித்துள்ளார்.
அவரது சட்டத்தரணி என்ற வகையிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
தற்போது 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவநேசதுரை சந்திரகாந்தனை சந்திக்க வேண்டுமென சட்டத்தரணி உதய கம்மன்பில முன்னதாக திணைக்களத்திற்கு அறிவித்திருந்தார்.
அவரது சட்டத்தரணிக்கு மாத்திரமே சந்தர்ப்பம் வழங்கப்படுமென பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
உதய கம்மன்பிலவே தமது சட்டத்தரணி என சிவநேசதுரை சந்திரகாந்தனை அறிவித்தமைக்கு அமைய இந்த சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஒருவர் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்காக சிவநேசதுரை சந்திரகாந்தன் மட்டக்களப்பில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கடந்த 8ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
சிவநேசதுரை சந்திரகாந்தன் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்தார்.
10 Views
Comments