அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை நாளை வழங்குமாறு அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குமாறு அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
சுற்றறிக்கையினூடாக இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏதேனுமொரு காரணத்தினால் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தொகையை அன்றைய தினத்திற்குள் வழங்க முடியாவிடின் எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் என அமைச்சின் செயலாளர் எஸ்.ஆலோக பண்டார தெரிவித்துள்ளார்.
17 Views
Comments