23 பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
04

23 பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

23 பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

23 பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

 

பொருட்களின் விலைகளை காட்சிப்படுத்தாமை, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தியமை  மற்றும் பொருட்களில் குறிப்பிட வேண்டிய தகவல்கள் இன்றி விற்பனை செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த வருடத்திலும் 172 பல்பொருள் அங்காடிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சுமார் 6.5 மில்லியன் ரூபா அபராதம் வசூலிக்கப்பட்டது.

 

பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சந்தைகளில்  பொருட்களை கொள்வனவு செய்யும் போது காலாவதி திகதி மற்றும் பிற தகவல்களையும் உறுதிப்படுத்திக் கொள்ளுமாறும் நுகர்வோர் விவகார அதிகார சபை மக்களை அறிவுறுத்தியுள்ளது.

 

பண்டிகை காலத்தை முன்னிட்டு  நுகர்வோர் விவகார அதிகாரசபை நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகளை ஆரம்பித்துள்ளது.

views

22 Views

Comments

arrow-up