பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞரின் சடலத்தை தோண்டியெடுத்து மீள பிரேத பரிசோதனை நடத்த உத்தரவு

வெலிக்கடை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த போது உயிரிழந்த இளைஞரின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனையை நடத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கொழும்பு பிரதம சட்டவைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணைகளை முன்னெடுக்குமாறு பதில் பொலிஸ் மாஅதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
விசாரணைகளின் இடைக்கால அறிக்கையை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு வழங்குமாறும் பதில் பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
சத்சர நிமேஷ் எனும் 26 வயதான இளைஞர் வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்தார்.
19 Views
Comments