முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
APR
10

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்...

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தொடர்ந்தும் விளக்கமறியலில்...

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா எதிர்வரும் 21ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

மஹர நீதவான் காஞ்சனா என் சில்வா முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

 

மேர்வின் சில்வா சார்பில் ஆஜரான சட்டத்தரணி முன்வைத்த பிணை கோரிக்கையையும் நீதவான் நிராகரித்தார்.

 

வழக்கு தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட ஏனைய மூவரையும் ஏப்ரல் 21ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

 

அரசாங்க நிர்மாணமொன்றுக்காக விடுவிக்கப்பட்ட காணியொன்றை தனியாரொருவருக்கு விற்க முற்பட்ட சம்பவத்தை  அடிப்படையாகக் கொண்டு முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட மூவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கடந்த மார்ச் 6ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

 

வழக்குடன் தொடர்புடைய முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட 2 சந்தேகநபர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் நீதவான் பிடியாணை பிறப்பித்தார்.

views

18 Views

Comments

arrow-up