சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கான திட்டத்தை தயாரிப்பதற்கு மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான சுமார் 40,000 வழக்குகள் நிலுவையில் உள்ளமை வௌிக்கொணரப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
பல ஆண்டுகளாக சில வழக்குகளுக்கான தீர்ப்பு வழங்கப்படும் செயற்பாடுகள் தாமதமாகி வருவதால் சிக்கல் நிறைந்த சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சுடன் பலகட்ட கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் மீது உடனடியாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை விரைவுபடுத்த சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் உதவியைப் பெறுவதற்கான திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
17 Views
Comments