தியுனுகே ஹென்றி பெட்ரிஸுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
13

தியுனுகே ஹென்றி பெட்ரிஸுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

தியுனுகே ஹென்றி பெட்ரிஸுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அநீதியான குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட தியுனுகே ஹென்றி பெட்ரிஸுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

இது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

 

பிரித்தானிய ஆளுநரால் நியமிக்கப்பட்ட இராணுவ நீதிமன்றத்தில் தியுனுகே ஹென்றி பெட்ரிஸுக்கு எதிராக அடிப்படையற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதுடன் அவருக்கு மரணதண்டனையும் விதிக்கப்பட்டது.

 

1915ஆம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரத்தின் போது இடம்பெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

 

குறித்த காலகட்டத்தில் ஹென்றி பெட்ரிஸ், கொழும்பு நகரப் பாதுகாப்பு படைப்பிரிவின் கெப்டனாக செயற்பட்டார்.

 

109 வருடங்களாக அவர் அனுபவித்த அநீதியான தண்டனை தொடர்பில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

views

159 Views

Comments

arrow-up