வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
09

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு

வவுனியாவில் மரக்கடத்தல் முறியடிப்பு

வவுனியா (Vavuniya), மரக்காரம்பளையில் மரக்கடத்தல் ஒன்றினை முறியடித்துள்ளதாக நெளுக்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

இந்த முறியடிப்பு நடவடிக்கை இன்று (09) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக மரங்களை ஏற்றிச் சென்ற ஜீப் ரக வாகனத்தை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திவுல்வெவ தலைமையிலான போக்குவரத்து பொலிஸார் சோதனை செய்த போது சுமார் இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான 72 மரங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன

 

அத்துடன், மரக்கடத்தலுக்கு பயன்படுத்திய ஜீப் ரக வாகனமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர், நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

views

70 Views

Comments

arrow-up