அரசியல் நியமனம் பெற்ற 18 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளனர்

அரசியல் நியமனம் பெற்ற 18 தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் மீள அழைக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு அமைய வெளிநாட்டு சேவையை வினைத்திறன் மிக்க சேவையாக மாற்றும் நோக்கில் இவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா குறிப்பிட்டார்.
அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவரான மகிந்த சமரசிங்க அந்த பதவியில் தொடர்ந்து பணியாற்றுவார் எனவும் அவர் கூறினார்.
அரசியல் செல்வாக்கு அல்லாத அரச சேவையை உருவாக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மேலும் தெரிவித்தார்.
75 Views
Comments