மின்சாரம் தாக்கி மூவர் பரிதாபச் சாவு! புத்தளத்தில் துயரம்

புத்தளத்தில்(Puttalam) மின்சாரம் தாக்கியதில் மூவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயரச் சம்பவம் புத்தளம் - பழைய மன்னார் வீதியில் 2ஆம் கட்டை பகுதியில் நேற்று(28) இடம்பெற்றுள்ளது.
நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடத்தில் ஏறி நின்று வேலை செய்த இரும்பிலான பலாஞ்சியில் மீது மின்சாரம் பாய்ந்ததில் அதனைத் தூக்கிச் சென்ற 4 பேர் மீது மின்சாரம் தாக்கியுள்ளது.
இருப்பினும், அவர்களில் ஒருவர் தூக்கி விசப்பட்ட நிலையில், உயிர் பிழைத்துள்ளார். எனினும் ஏனைய மூவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
77 Views
Comments