இலங்கை கடன் தரப்படுத்தலில் சாதகமான முன்னேற்றத்தை வௌிப்படுத்தியுள்ளது - ஃபிட்ச் ரேட்டிங்ஸ்

இலங்கை கடன் தரப்படுத்தலில் சாதகமான முன்னேற்றத்தை வௌிப்படுத்தியுள்ளதாக ஃபிட்ச் ரேட்டிங்ஸ் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் இலங்கையின் நீண்டகால சர்வதேச கடன் தரப்படுத்தலை உயர்த்தியுள்ளது.
இலங்கையின் நீண்டகால சர்வதேச கடன் தரப்படுத்தல் RD மட்டத்தில் இருந்து CCC PLUS மட்டம் வரை உயர்த்தப்பட்டுள்ளதுடன் உள்நாட்டு கடன் தரப்படுத்தல் CCC MINUS மட்டத்தில் இருந்து CCC PLUS மட்டம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
சர்வதேச கடன் மறுசீரமைப்பின் வெற்றியானது பேரினப் பொருளாதார குறிகாட்டிகளை மேம்படுத்தியுள்ளதுடன் உள்ளூர் நாணய இயல்புநிலை அபாயத்தை குறைத்துள்ளதாகவும் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் சர்வதேச கடன் தரப்படுத்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்புக்கு அமைய 8 திறைசேரி முறிகளின் ஊடாக சர்வதேச இறையாண்மை முறிகள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த அனைத்து முறிகளும் ஒதுக்கப்பட்ட 19,466.1 மில்லியன் ரூபாவை கொண்டுள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
86 Views
Comments