வவுனியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
DEC
29

வவுனியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வவுனியாவில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

வவுனியா - பூவரசங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கல்படை கிராமத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் வேலங்குளம் பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பூவரசங்குளம் பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சிதம்பரபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்குளம் பகுதியிலும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கியுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவைச் ​சேர்ந்த 22 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

views

112 Views

Comments

arrow-up