உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
04

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

 

குறித்த சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வௌியிடப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

 

திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்படவில்லையெனின் அதனை இந்த மாதத்திலேயே நிறைவேற்றிக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்குமெனவும் அவர் குறிப்பிட்டார்.

 

அதன் பின்னர் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை இடையூறு ஏற்படாத வகையில் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார்.

 

திறைசேரியூடாக உரிய வகையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலை  நடத்த முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

 

இந்நிலையில் புதிய வாக்காளர்களுக்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்துச் செய்ய அண்மையில் கூடிய அமைச்சரவையில் தீர்மானம் எட்டப்பட்டது.

views

73 Views

Comments

arrow-up