வடமத்திய மாகாணத்தில் தவணை பரீட்சை விடைத்தாள் வெளியானமை தொடர்பில் விசாரணை

வடமத்திய மாகாணத்தில் மூன்றாம் தவணை பரீட்சையின் புவியியல் வினாத்தாளுக்கான விடைத்தாள் வெளியானமை தொடர்பில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமேவன் தர்மசேனவின் ஆலோசனையின் பேரில் குறித்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் வினாத்தாளை இரத்து செய்து புதிய வினாத்தாளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்கள் ஊடாக விடைத்தாளை வெளியிட்ட ஆசிரியை தொடர்பில் மேலதிக நடவடிக்கைகள் எடக்கப்படும் என வடமத்திய மாகாண கல்விச் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.
74 Views
Comments