பசறை - லுணுகலை மார்க்கத்தின் 13ஆம் கட்டை பகுதியில் பசறை நோக்கி பயணிக்கும் பகுதி திறப்பு

மண்சரிவு காரணமாக மூடப்பட்டிருந்த பசறை - லுணுகலை மார்க்கத்தின் 13ஆம் கட்டை பகுதியில் பசறை நோக்கி பயணிக்கும் பகுதி ) மாலை 06 மணி வரை திறந்திருக்கும் என பதுளை மாவட்ட செயலாளர் பிரபாத் அபேவர்தன தெரிவித்தார்.
நாளை(25) முதல் மறு அறிவித்தல் வரை காலை 06.30 முதல் மாலை 06 மணி வரை குறித்த வீதியை திறப்பது தொடர்பில் தொழில்நுட்ப மதிப்பீடுகளின் பின்னர் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதனிடையே, குறித்த வீதியை பயன்படுத்து உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு பதுளை மாவட்டச் செயலாளர் அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளார்.
140 Views
Comments