பலத்த மழையுடனான வானிலையால் 15,622 பேர் பாதிப்பு - இடர் முகாமைத்துவ நிலையம்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
25

பலத்த மழையுடனான வானிலையால் 15,622 பேர் பாதிப்பு - இடர் முகாமைத்துவ நிலையம்

பலத்த மழையுடனான வானிலையால் 15,622 பேர் பாதிப்பு - இடர் முகாமைத்துவ நிலையம்

கடந்த ஒருவார காலப்பகுதிக்குள் கடும் காற்று மற்றும் பலத்த மழையுடனான வானிலையால் 4,184 குடும்பங்களைச் சேர்ந்த 15,622 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

05 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அதிகளவிலானோர் மன்னார் மாவட்டத்திலேயே பாதிக்கப்பட்டுள்ளதுடன், அந்த மாவட்டத்தில் 7,854 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட 399 பேர் 05 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

5 மாவட்டங்களிலும் 44 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

views

107 Views

Comments

arrow-up