குளத்தில் மூழ்கி இளைஞர் பலி

வவுனியா தவசிக்குளம் பகுதியிலுள்ள குளத்தில் மூழ்கி இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
குளத்தில் நீராடச் சென்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்த போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
நாவலப்பிட்டியை சேர்ந்த 18 வயதான இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
10 Views
Comments