ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க விளக்கமறியலில்...
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
10

ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க விளக்கமறியலில்...

ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க விளக்கமறியலில்...

ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

 

கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் இன்று(10) பிற்பகல் அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

மிரிஹானை பகுதியில் தமது அயலவர் ஒருவரின் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் உதயங்க வீரதுங்க இன்று(10) கைது செய்யப்பட்டார்.

 

வீட்டின் மதிலொன்றை நிர்மாணிக்கும் போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய காணொளிகள் தாக்குதலுக்குள்ளான நபரால் பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளன.

 

தாக்குதலுக்குள்ளான நபர் தற்போது ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். 

 

சம்பவம் தொடர்பில் மிரிஹானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

views

79 Views

Comments

arrow-up