26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
10

26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை

26 வயது இளைஞருக்கு ஆயுள் தண்டனை

26 வயது இளைஞர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று(10) ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

சிறைச்சாலைக்குள் 25 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுசென்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டதையடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 

2019ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்த தமது நண்பருக்கு உணவு கொண்டுசென்ற பொதியில் ஹெரோயினை மறைத்து கொண்டுசென்ற சந்தர்ப்பத்தில் சிறைச்சாலை புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

 

ஹெரோயினை தம்வசம் வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சட்ட மாஅதிபரால் பிரதிவாதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 

views

74 Views

Comments

arrow-up