அரிசி இறக்குமதிக்கான கால அவகாசம் இன்று(10) நள்ளிரவுடன் நிறைவு

அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று(10) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.
இன்று நள்ளிரவின் பின்னர் இறக்குமதி செய்யப்படும் அரிசி தொகை திருப்பியனுப்பப்படும் என வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது.
இதனிடையே, அரிசி இறக்குமதிக்காக வழங்கப்பட்ட காலப்பகுதியை பயன்படுத்தி தனியார் இறக்குமதியாளர்களால் இதுவரை 125,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிக தொகை அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அரச வணிகக் கூட்டுத்தாபனத்தின் தலையீட்டுடன் 5,000 மெட்ரிக் தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
98 Views
Comments