கட்டளையை மீறி பயணித்த லொறி மீது பொலிஸார் துப்பாக்கிச்சூடு

காலி - உடுகமவில் கட்டளையை மீறி பயணித்த லொறி மீது பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கால்நடைகளை ஏற்றிச்சென்ற குறித்த லொறியை வீதித்தடையில் நிறுத்துமாறு கட்டளையிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் லொறியை நிறுத்தாத காரணத்தால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவத்தில் எவருக்கும் காயமேற்படவில்லை.
இந்த சம்பவம் தொடர்பில் லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
123 Views
Comments